இன்றும் இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்; 31 பேர் பலி..!

0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,380 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,269 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 138,065ஆக உயர்வடைந்துள்ளது.


அதேவேளை இன்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக 31பேர் பலியாகியுள்ளனர். இதில் ஒருவர் வவுனியா என்பதும் குறிப்பிடத்தக்கது.