இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் நுளைந்தது; ஹமாசை முற்று முழுதாக ஒழிக்க திட்டம்..!

0

ஹமாஸ் விடுதலை இயக்கத்தை முற்று முழுதாக ஒழித்துக் கட்ட, இஸ்ரேல் முடிவு கட்டியுள்ளது. இஸ்ரேல் ஜனாதிபதி மெத்தன் யாகூ, செல்வாக்கை இழந்து அரசியல் அனாதையாக மாறி வந்தார்.

எதிர்வரும் தேர்தலில் தோல்வியை தழுவி வீடு செல்ல வேண்டிய பரிதாபமான சூழலில் அவர் இருந்தவேளை கையில் கிடைத்துள்ள மிகப் பெரிய ஆயுதம் தான் இந்தப் போர். எல்லையைக் கடக்க முற்பட்ட 24 பாலஸ்தீன் அகதிகளை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றதற்காக, ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியது.

200 ஏவுகணைகளை அவர்கள் ஏவினாலும் அதில் 3 அல்லது 6 ஏவுகணைகள் தான் இஸ்ரேல் மண்ணில் விழுந்து வெடித்தது. ஏன் எனில் அந்த அளவு வான் பாதுகாப்பில் இஸ்ரேல் ஒரு தனி ராஜா தான். சுமார் 190க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய எல்லைப் படை தானியங்கி ஏவுகணைகள் அழித்து விட்டது.


இந் நிலையில் சர்சைக்குரிய சூனியப் பிரதேசமாக உள்ள காசா பகுதியை பாலஸ்தீனர்கள் வைத்திருந்தார்கள். தற்போது அந்தப் பகுதியில் கடும் வான் தாக்குதலை நடத்தி, அங்கே பெரும் அழிவுகளை ஏற்படுத்தி, தனது படையை காசாவுக்குள் நகர்த்தியுள்ளது இஸ்ரேல்.

இதனூடாக ஜனாதிபதி மெத்தன் யாகூவுக்கு பெரும் அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை நேற்று இரவு முழுவதுமாக, ஹமாஸ் விடுதலை இயக்கத்தின் 150 நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆட்டிலறி எறிகனை கொண்டும், அப்பாச்சி ஹெலிகொப்டர் மூலமாகவும் மேலும் போர் விமானங்களைக் கொண்டு இந்த கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ள நிலையில் சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


பாலஸ்தீனுக்கு சொந்தமான காசா பகுதியின் ஒரு முனையை, இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்கே தொடர்ந்தும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் நேற்று இரவு மட்டும் சுமார் 1,000 குண்டுச் சத்தங்களுக்கு மேல் கட்டதாக அப்பிரதேசத்தை அண்டி வாழும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


ஹமாஸ் விடுதலை இயக்கத்தின் 11 மூத்த தலைவர்கள், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் விடுதலை இயக்கம் மீண்டும் தனது போராளிகளை ஒன்றினைத்து, பதிலடி கொடுக்க நேரம் கொடுக்காமல் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றது.

ஈழத் தமிழர் போராட்டங்களுக்கு ஆரம்பிய காலத்தில் இருந்து உதவி வந்த பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களின் பிரிவுகளில் ஒன்று தான் ஹமாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.