முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்பு; அநாகரிகத்தின் உச்சக் கட்டம் – மாவை கண்டனம்

0

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை, வெறுமனே கல்லினால் ஆன ஒரு தூபியை உடைத்த சம்பவம் மாத்திரம் அல்லவெனவும் அது லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களையும் தகர்த்திருக்கிறது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னங்கள் இரவோடிரவாய் அழிக்கப் பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக அறிக்கையொன்றின் மூலம் அவர் தெரித்துள்ளார்.


குறித்த அறிக்கையில்,

மரணித்தவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சக் கட்டம் எனக் கூறியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது.

எம் இனத்தின் ஆன்மத்தையே அழிக்கும் இந்த நாகரிகமற்ற செயலை நாகரிகமுள்ள அனைவரும் உலகமும் கண்டித்தே ஆக வேண்டும்.


அரசு அதன் இராணுவம், பௌத்தர்களும் நேற்று முன்தினம் முல்லைத்தீவு குருந்தூர் மலைப் பிரதேசத்தில் சைவ மக்களின் வழிபாட்டுத்தலத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் மீறி ஒன்று கூடி பௌத்த சிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

அழிக்கப்பட்ட நினைவிடத்தையும் நினைவுச் சின்னங்களையும் மீள அமைப்போம் – தமிழ் இன விடுதலையை நிலைநாட்ட திடசங்கற்பம் கொள்வோம் என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.