இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; அபாய கட்டத்தில் நாடு..!

0

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் பதிவாகிய கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக உயர்வடைந்துள்ளது.


இதற்கமைய, நாட்டில் மேலும் 927 பேர் இன்று கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று இது வரையான காலப்பகுதியில் 2,659 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை இன்றைய தினம் முதல் தடவையாக 2000 ஐக் கடந்துள்ளது.


இந்நிலையில், நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 125, 893 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை எதிர்வரும் செப்ரெம்பருக்குள் நாட்டில் 20,000க்கும் அதிகமானோர் பலியாக சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.