கிழக்கு பல்கலைக் கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாணவன் கைது..!

0

கிழக்கு பல்கலைக் கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக் கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை ஏறாவூர் பொலிசார் நேற்று சனிக் கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளனர்.


குறித்த பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வரும் மாணவியை சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மாணவனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட மாணவன் விடுதியில் தங்கிருந்து கல்வி கற்று வரும் 25 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.