கடலில் வந்த புலிகளின் தலைவரின் படம்; கடற்படையின் விசாரணைகள் ஆரம்பம்..!

0

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த வியாழக் கிழமை தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த மீனவர்கள், இலங்கை கடற் படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்த பின்னர் அவர்களை விடுவித்திருந்தனர்.

தற்போது, எடுக்கப்பட்ட காணொளி மற்றும் ஒளிப்படங்களை அடிப்படையாகக் கொண்டு கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.