நள்ளிரவில் ஆடையின்றி தொலைபேசி முன் நின்ற மகள்; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

0

இந்திய மாநிலமான புதுச்சேரியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி நள்ளிரவில் மொபைல் போன் முன்பு ஆடையின்றி நின்றதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், தற்போது பெற்றோர்கள் மற்ற பெற்றோர்களின் விழிப்புணர்விற்காக வெளியே கூறியுள்ளனர். சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


ஒன்லைன் வகுப்பில் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த மாணவி, பொழுதுபோக்கிற்காக முகநூலிற்கு சென்றுள்ளார். அதில் சேலம் என்ற பெயரில் அழகான புகைப்படத்துடன் இருந்த நபருடன், நட்பாக பேச ஆரம்பித்த மாணவியிடம், குறித்த நபர் பாலியல் ரீதியாக பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில் குறித்த இளைஞரின் பேச்சுக்கு மயங்கிய மாணவி, ஆடையில்லாமல் நள்ளிரவில் போன் முன்பு நின்று வீடியோ கோல் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சிறுமியின் பெற்றோரின் கண்ணில் நள்ளிரவில் மாட்டிக் கொண்ட பின்பு, தனது மகள் போன்று மற்ற பெண்கள் பாதித்து விடக் கூடாது என்பதற்காக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.


பொலிசாரின் விசாரணையில், குறித்த நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த கமலக் கண்ணன் என்பதும், இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இதே போன்று பல பெண்களிடம் பேசி வந்தது மட்டுமின்றி, 200க்கும் மேற்பட்ட பெண்களின் 500க்கு மேற்பட்ட ஆபாச காணொளிகள் இருந்ததோடு, இரண்டு ஆன்ராய்டு போனையும் கைப்பற்றியுள்ளதோடு, அவரைக் கைது செய்யவும் செய்துள்ளனர்.


தற்போதய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் வகுப்பிற்கு போனைக் கொடுத்துவிட்டு, வகுப்பு முடிந்த பின்பு வாங்குவதையும், அவர்களை கண்காணிக்க வேண்டியதும் அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது இந்த உண்மைச் சம்பவம்.