ஹோட்டல்களில் இடம் பெறும் விருந்துபசாரம் மற்றும் கூட்டங்களுக்கு இன்று இரவு 10மணி முதல் தடை..!

0

ஹோட்டல்களில் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றம் இரவு நேர கேளிக்கை போன்றவற்றுக்கு இன்று (01) இரவு 10 மணி தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்று கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.