ரிஷாட் எம்பி தொடர்பில் சபாநாயகரால் விடுக்கப்பட்ட விஷேட அறிவிப்பு..!

0

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுப்பாராயின் அவரை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோவினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இது தொடர்பிலான அறிவிப்பு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.