இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் தொகை 200,000ஐ கடந்தது; உடல்களை தகனம் செய்ய போதியளவு இடமில்லை..!

0

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில், தொடர்ச்சியாக 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிகிச்சைகளில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. உடல்களை தகனம் செய்வதிலும் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.


டில்லியில் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடம் இன்மையினால் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை தகனம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு மருத்துவப் பொருட்களை வழங்கி வருகின்றன.


இதேவேளை 4,000 ஒக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியாவுக்கு வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

வட மாநிலங்களில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறுவதால், ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், வட மாநிலங்களில் வன்முறைகளும் இடம்பெற ஆரம்பித்துள்ளன.