முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் CIDஆல் நள்ளிரவில் அதிரடிக் கைது..!

0

இன்று அதிகாலை 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது அவரது வீட்டை சுற்றி வளைத்து வீட்டின் கதவை உடைத்து கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ரிஷாட்டின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து சற்றுமுன் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளனர்.


ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதாக இருந்தால் பாராளு மன்றத்திலோ அல்லது பாராளுமன்றுக்கு வெளியிலோ வைத்து அவரை கைது செய்திருக்கலாம்.

ஆனால், தற்பொழுது நள்ளிவு 1.30 மணியளவில் எந்தவொரு குற்றச் சாட்டுக்களோ, பிடியாணை உத்தரவின்றி, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று கூறி அவரை கைது செய்யுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


மேலும் இது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலாகவே கருதப்படுகின்றது. இந்த புனித ரமழானுடைய மாதத்தில், தலைவருக்காகவும் அவரது சகோதரருக்காகவும் அனைவரும் இறைவனை பிரார்த்தியுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.