க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியீடு..!

0

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப் படுகின்றது. இந்தப் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


இதேவேளை ,கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.