வவுனியாவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நபர் ஒருவர் கைது..!

0

வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


42 வயதுடைய நபரொருவரே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த விடுதலை புலி அமைப்பின் உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலிக் கடவுச் சீட்டுக்களை தயாரித்து நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.