யாருக்கு எது நடந்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நாளை திட்டமிட்டபடி திறக்கப்படும்..!

0

யாழ் பல்கலையில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ் பல்கலை நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பல்கலை நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.


இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதுடன் மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலை நிர்வாகம் ஜனவரி 11அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.


யாழ் பல்கலைக் கழக உப வேந்தரின் அனுமதிக்கு அமைய, இந்த அடிக்கல் நாட்டப்பட்டு நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் நாளை திறந்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந் நிலையில் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திடீர் மாரடைப்பு காரணமாக யாழ் போதான வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், எது நடந்தாலும் நாளையதினம் திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைக்கப்படுமென யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.