பல்கலைக் கழகங்கள் மீள ஆரம்பிக்கும் திட்டம் இரு வாரங்களிற்கு ஒத்தி வைப்பு..!

0

பல்கலைக் கழங்கள் மீள ஆரம்பிக்கும் திட்டம் இரு வாரங்களிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏலவே, ஏப்ரல் 27 ஆம் திகதி அனைத்து பல்கலைக் கழகங்களும் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்திருந்தது.


நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் , நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.


நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இரண்டு வாரங்களில் பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என அனைத்து துணை வேந்தர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.