யாழ்.பல்கலை வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நாளை திறப்பு; துணைவேந்தருக்கு இன்று மாரடைப்பு..!

0

யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா மரடைப்பின் காரணமாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் யாழ்.பல்கலை கழக வளாகத்தில் இடித்து அழிக்கப்பட்ட நிலையில் மீள அமைக்கப்பட்டு நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.


அத்துடன் துணைவேந்தர் சிறீ சற்குராஜாவே நாளை நினைவுத் துாபியை திறந்துவைப்பார் என கூறப்பட்டது.


புதிதாக கட்டப்பட்ட நினைவு துாபிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு துாபி என பெயரிடுவதா? அல்லது சமாதான துாபி என பெயரிடுவதா? என சர்ச்சைகள் எழுந்திருந்ததாக கூறப்படும் நிலையில் துணை வேந்தர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.