கரைதுறைப்பற்று பிரதேச சபை டெலோவின் வசமானது; தலைவராக விஜிந்தன் தெரிவு..!

0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தேர்வு 22.04.2021 இன்று இடம் பெற்ற நிலையில், சபையினை மீளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றான டெலோ கைப்பற்றிக் கொண்டது.


தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.