உடல் நலக் குறைவு காரணமாக முத்தையா முரளிதரன் வைத்திய சாலையில் அனுமதி..!

0

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்திய சாலையொன்றில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நேற்றைய தினம் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந் நிலையில் அவர் திடீரென வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


முத்தையா முரளிதரன் தற்போது ஐதராபாத் சன் ரைசஸ் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.