விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சி; யாழைத் தொடர்ந்து முல்லைத்தீவிலும் ஒருவர் கைது..!

0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், யாழில் கைது செய்யப் பட்டவர்களுடன் தொடர்பினை பேணிய குறித்த புதுக்குடியிருப்பு குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.


45 வயதுடைய பாடசாலை வீதிவள்ளிபுனம், புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தரே இன்று அதிகாலை பயற்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் கைதான நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளதாக தெரியவருகின்றது.