27 பொருட்களுக்கான சலுகை விலையை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க திட்டம்..!

0

27 பொருட்களுக்கு சதோச நிறுவனம் சலுகை வழங்கின்றது. இந் நிலையில் நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு அமுற்படுத்த எதிர்பார்ப்பதாக சதோச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருவதாக இதனால் நுகர்வோரை ஏனைய வியாபாரிகளால் ஏமாற்றுவதற்கு முடியவில்லை.


சந்தையின் தீர்மானமிக்க சக்தியாக சதோச நிறுவனம் செயற்படுகின்றது. சலுகைப் பொதிக்கு பாரிய கிராக்கி நிலவுகின்றது என சதோச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.