தமிழ்பொறி வாசகர்களுக்கு இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்..!

0

அனைத்து வாசகர்களுக்கும் தமிழ்பொறி இணையத்தளம் தனது தமிழ் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றது.

இந்த உலகமே மிகவும் பாரியதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களைத் எமது வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான மற்றும் சுகாதார வழிகாட்டல்களுக்கு உட்பட்ட வகையிலேயே கொண்டாட வேண்டிய அவசியமுள்ளது.


மக்களின் சுகாதார நலனை கருத்திற் கொண்டு விதிக்கப்பட்ட சட்ட திட்டங்கள் மற்றும் தடைகளை புத்தாண்டு நாட்களிலும் கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடுவோம்.

எனவே இம்முறை புத்தாண்டினை எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் உங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் கொண்டாடுவோம்.

எமது தேசமும்,மக்களும் முகம் கொடுத்துள்ள சகல பிரச்சினைகளையும் வெற்றி கொள்வதற்கு உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் நாமனைவரும் கைகோர்த்து செயற்படுவோம் என உறுதியெடுப்போம்.

இந்த புத்தாண்டு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டு வரவும் சகல நன்மைகளை பெறவும் தமிழ்பொறி இணைய ஊடகம் சார்பாக உளமார வாழ்த்துகின்றோம்.


பிலவ வருடப் பிறப்பு

மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கிறது.

விஷூ புண்ணிய காலம்

முன்னிரவு நாடி 38 விநாடி 51 (9.39 மணி) முதல் அன்று பின்னிரவு நாடி 58 விநாடி 51 (5.39 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.

மருத்து நீர், ஆடை

இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் நீலம், சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.

உணவுகள்

அறுசுவை உணவுடன் பொரிக்கறி, கசப்பு என்பவை சேர்த்தருந்த வேண்டும்.

தோஷ நட்சத்திரங்கள்

அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம், பூரம், உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம், பூராடம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.


கைவிசேஷம்

14.04.2021 காலை 09.09 – 09.52 வரை
14.04.2021 பிற்பகல் 2.22 – 4.11 வரை
16.04.2021 அதிகாலை 4.14 – 5.07 வரை
17.04.2021 காலை 07.40 – 09.00 வரை
17.04.2021 பிற்பகல் 03.04 – 03.59 வரை

பலன்

மேடம் – நஷ்டம்
இடபம் – நஷ்டம்
மிதுனம் – சமசுகம்
கடகம் – நஷ்டம்
சிங்கம் – பெருநஷ்டம்
கன்னி – சமசுகம்
துலாம் – நஷ்டம்
விருச்சிகம் – நஷ்டம்
தனு – அதிகலாபம்
மகரம் – சமசுகம்
கும்பம் – சமசுகம்
மீனம் – அதிகலாபம்

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம் !!!