மொட்டுக்கு விழுந்தது முதல் அடி; சாதித்தது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி..!

0

குருநாகல் – பன்டுவஸ் நுவர கூட்டுறவுச் சங்கத்திற்கு பணிப்பாளர்கள் இருவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் தோல்வியை தழுவியுள்ளார்.


கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு இடம் பெற்ற புதிய நபருக்கான தெரிவுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.


இதன்படி – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் 58 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்தக் கூட்டுறவு சங்கத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் 58 பேரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 6 பேரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.