மூன்று கிலோ அரிசியில் இரண்டு வாரங்கள் உணவு சமைத்து உண்ட அமைச்சர் பந்துலவின் குடும்பம்..!

0

அமைச்சர் பந்துல தெரிவித்த சர்ச்சை கருத்தால் அரசாங்கம் சிக்கலை எதிர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மூன்று கிலோ அரிசியில் ஒரு குடும்பம் இரண்டு வாரங்கள் உணவு சமைத்து உட்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ள கருத்தே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே 25000 ரூபாவில் ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு உணவு உட்கொண்டு வாழலாம் என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பியவர் பந்துல குணவர்த்தன.


இந்தநிலையில், அரசாங்கம் 1000 ரூபாவிற்கு நிவாரண பொதி வழங்குவதாகவும் ஆனால் அந்த நிவாரண பொதியை குறைந்த விலையில் வேறு இடங்களில் சிலர் விற்பனை செய்வதாகவும் ஆனால் அரசாங்கத்தின் நிவாரண பொதியில் உள்ள பொருட்கள் மிகவும் தரமானவை எனவும் பந்துல தெரிவித்துள்ளார்.


வர்த்தக அமைச்சில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை தற்போது இந்தியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதிகள் மட்டுப் படுத்தப்பட்டு மிக ஆரோக்கியமான, தரமான, மலிவான உணவுப் பொருட்களை சீனாவிலிருந்து அதிகளவில் அரசு இறக்குமதி செய்து வருகின்றது.