புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய பிரஜை திடீர் மரணம்..!

0

குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளார்.


மேலும் வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், நேற்று (06) இரவு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வாரியபொல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


அத்தோடு 45 வயதுடைய இந்திய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.