உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும்..!

0

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பெறுபேற்றை இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பரீட்சையின் பெறுபேற்றை கொண்டு மாணவர்கள் கால தாமதமில்லாமல் பல்கலைக் கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


கண்டி கலகெதர பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த மாரச் மாதம் இடம்பெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு ஜூன் மாதம் வெளியிடப்படும்.


உயர்தர கற்கையினை மேற்கொள்ள தகுதி பெற்ற மாணவர்களுக்கான உயர்தர கற்றல் நடவடிக்கைகள் ஜூலை மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் காலதாமதமில்லாமல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது.

பல்கலைக் கழகங்களில் காணப்படும் பௌதீள வள பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு யோசனைகளை முன்வைத்துள்ளது.


பல்கலைக் கழக மாணவர்களின் தங்குமிட பற்றாக்குறைக்கு தீர்வுகாண உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி சேவையில் ஈடுப்படுபவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.