வவுனியா பம்பைமடுவில் 400 மாணவிகளுடன் முடக்கப்பட்ட விடுதி..!

0

வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாணவர்கள் தங்கும் விடுதி தற்காலிமாக முடக்கப்பட்டுள்ளது.


குறித்த மாணவி விடுமுறையில் சென்று மீண்டும் பல்கலை கழகம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கொரோனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இதனையடுத்து பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் பெண்கள் விடுதியின் ஒருபகுதி சுமார் 400 மாணவர்களுடன் இன்று முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளிச் செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.


அவர்களிற்கு கட்டம், கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.