ஆட்டம் காணும் மகிந்த அரசு; கோட்டாபயவுக்கு நெருக்கமானவர் சஜித்துடன் இணைவு..!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக வழிகளை தயார் செய்த வியத்மக அமைப்பின் உறுப்பினர் ஒருவர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்துள்ளார்.

வியத்மக அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா என்பவரே சஜித்துடன் நேற்றைய தினம் இணைந்துள்ளார்.


இதனையடுத்து அவர் சஜித் பிரேமதாஸவின் ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பொனிபஸ் பெரேரா மேல் மாகாண சபைக்காக களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.


இதேவேளை நாட்டின் கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடியால் இந்த அரசு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.