காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு சலுகைக் காலம்..!

0

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான காலாவதி திகதி 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதி ஆகும் தினத்திலிருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில், போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.


கடந்த வருடம் ஜூலை மாதம் 17 ஆம் திகதி செல்லுபடியாகும் கால எல்லை தளர்த்தப்பட்ட சாரதிகளின் அனுமதிப் பத்திரத்திற்கு புதிய வர்த்தமானி அறிவித்தல் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.