ஈழத் தமிழர்களின் உரிமைக் குரல் ஒன்று ஓய்ந்தது; பேரதிர்ச்சியில் உலகத் தமிழர்கள்..!

0

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81 ஆவது வயதில் இன்று இறைபதம் எய்தினார்.

யாழ். திருச்சிலுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் நித்திய இளைப்பாறினார்.

1992 ஆம் ஆண்டு முதல் மன்னார் மறைமாவட்ட இரண்டாம் ஆயராக பதவி வகித்து 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.


பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை மன்னார் மறை மாவட்டத்திற்காக அளப்பரிய சேவையாற்றியதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


பேராயராக இருந்த போதிலும் மதம் கடந்து, பேரன்பு கொண்டு தமிழின மக்களின் பாதுகாப்பிற்கும், மறுவாழ்விற்கும் அயராது பாடுபட்ட அவரது தொண்டு நிறைந்த பெருவாழ்வு நிலைத்த புகழுக்குரியது.


பேராயர் இராயப்பு ஜோசப் அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழ் தேசியத்தின் மீது நீங்காத பற்றுறுதியுடன், இனத்தை முதன்மைப்படுத்தி மக்களுக்கு அவராற்றிய மகத்தான பணிகளை தமிழினம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளது.