அசாத்சாலியிடம் மீட்கப்பட்ட துப்பாக்கி குறித்து விசாரணை; பொலிஸ் பேச்சாளர்..!

0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல்மாகாண ஆளுர் அசாத் சாலியின் காரிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கொள்ளுப்பிட்டியில் வைத்து முன்னாள் மேல்மாகாண ஆளுநனர் அசாத் சாலி கைது செய்யப்பட்டதுடன், அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.


இந் நிலையில், கைது செய்யப்படும் போது அசாத் சாலி பயணித்த காரை சோதனைக்கு உட்படுத்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் காரிலிருந்து, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும், அதன் தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர்.


அதற்கமைய துப்பாக்கி தொடர்பிலும் குற்றப்புலனாய்வு பிரிவினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த துப்பாக்கி கிடைக்கப் பெற்ற விதம் மற்றும் அதனால் ஏதேனும் குற்றச் செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.