வன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு..!

0

வன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர்களுக்கான நியமனம் வழங்கும் . நிகழ்வு நேற்று வவுனியா மகாறம்பைக்குளம் அரசினர் தமிழக் கலவன் பாடசாலையில் மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர் அமைப்பின் தேசிய பணிப்பாளர் வைத்தியர் எம் . எஸ் . சாதீக் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றது


இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்திற்கான குழுக்களாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் . சுதர்சினியும் நெடுங்கேணி பணிப்பாளராக கு . நவஜீவன் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளராக இ டிரோஜன், வவுனியா மாவட்ட செயலாளராக யோ.டெலின் ரேவதி , மற்றும் கல்விப்பிரிவிற்கு முதந்தன் , முல்லைதீவு மாவட்டத்தின் பணிப்பாளராக வி . பெலிக்ஸ் பவுல் நிரோஜன், மன்னார் மாவட்டத்திற்கு பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவின் தலைவராக ப தபித்தாள் . மற்றும் உதவிப் பணிப்பாளர்களுக்குமான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் வடமாகாணப் பணிப்பாளரும் சுற்றுச் சூழல் அபிவிருத்தித் திட்டத்தின் தேசிய பணிப்பாளருமான வைத்தியர் எம் . எஸ்.கணேஸ்வரன் , மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதரக அமைப்பின் பெண்கள் மற்றும் சிறுவர் இலங்கைகான பணிப்பாளர் நஸ்ரினா, மனித உரிமைகளுக்கான துாதரக அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகரும் பிரபல தொழிலதிபருமான பணிப்பாளர் ஜே.கே. ஜெயக்குமார் சமாதானத் துாதரக அமைப்பின் வவுனியா மாவட்டப் பணிப்பாளர் மற்றும் வடமாகாண திட்டமிடல் பணிப்பாளர் சு . சுலக்சன் மகாறம்பைக் குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் வைத்திஸ்வரன் ஆகியேர் கலந்து கொண்டனர்.