முஸ்லீம் உறவுகளின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி; விசேட வர்த்தமானி வெளியாகியது..!

0

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படலாமென குறிப்பிட்டு விசேட வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் அல்லது நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.


இதேவேளை இது தொடர்பில் அரசுக்கும், அரசுக்குள் ஒட்டி இருக்கும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுக்கும் ஏன் இம்ரான் கானுக்கும் முஸ்லீம் உறவுகள் நன்றி கூறத் தேவையில்லை.


காரணம் இது முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை. ஒவ்வொரு குடிமகனுக்குள்ள தனிப்பட்ட உரிமை. அந்த உரிமை பறிக்கப்பட்டு இவ்வளவு நாளும் நடந்த அநீதிகளுக்கு இலங்கை அரசு தான் மக்களிடம் மன்னிப்பை கோர வேண்டும்.


சர்வதேச ரீதியாக ஜனாசாக்களை புதைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட போதும், உள்ளூரில் மக்கள் கெஞ்சிக் கேட்டும் கண்டு கொள்ளாத அரசு, இனி அனுமதி வழங்கினால் என்ன வழங்கா விட்டால் என்ன என்ற மனநிலையில் முஸ்லிம் உறவுகள் இருந்த நிலையிலேயே சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.