மட்டுவில் சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குடிகாரத் தந்தைக்கு நேர்ந்த கதி..!

0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில் 13 வயதுடைய சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் இன்று (28.01.2021) உத்தரவிட்டார்.


மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் 38 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் சம்பவதினமான நேற்று புதன்கிழமை மதுபோதையில் இருந்துள்ளதுடன் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததுடன் தன்னுடன் படுக்கைக்கு வருமாறு அழைத்ததையடுத்து குறித்த சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.


இதனையடுத்து பொலிசார் குறித்த நபரை உடனடியாக கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.