வேலணை பிரதேச செயலாளருக்கு நேற்று முதல் திடீர் இடமாற்றம்..!

0

வேலணை பிரதேச செயலாளர் சோதிநாதன் திடீரென வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை செட்டிக்குளம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சிவகரன், வேலணைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.


அண்மையில் வேலணையில் கடற்படை தளம் அமைக்க, பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போது பிரதேசவாசிகள் அதனை எதிர்த்தனர்.


காணி சுவீகரிப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற விடயத்தை காணி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவித்திருந்த நிலையில் நேற்று மாலை வேலணை பிரதேச செயலாளர் சோதிநாதன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.