இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பில் தீவிர கவலையில் பிரிட்டன்..!

0

இலங்கை தொடர்பான ஐ.நா அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்பட உள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.


அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழக்கும் நிலையில் அவர்களது சடலங்களை கட்டாயமாக தகனம் செய்வது மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பில் கவலையடைவதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பாக கருத்து தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.