வவுனியாவில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா; ஆசிரியருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலில்..!

0

வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர் ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


வவுனியா வடக்கு புளியங்குளம் ஆசிரிய வள நிலையத்தில் கடந்த 7, 8 ஆம் திகதிகளில் 276 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 76 பேருக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் ஆசிரியரொருவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த ஆசிரியருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய 200 பேருக்கான முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.