துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஒருவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதி..!

0

துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் ஒருவர் நேற்றிரவு வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது அங்கு வந்த மனைவியின் சித்தப்பாவினால் குறித்த பெண்ணின் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், கட்டையினாலும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக பிரதேச வாசிகள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன், துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்குள்ளானவர் 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியாசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.