தூபி உடைப்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல்; அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்..!

0

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களை நினைவுக் கூரும் நினைவு தூபி இடித்து அகற்றப்பட்டமையை கண்டித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இறந்தவர்களை நினைவுக்கூருவது உரிமை! யாழ் பல்கலைக்கழகத்தில் இறந்தவர்களை நினைவுக் கூர அமைக்கப்பட்டிருந்த தூபி அழிக்கப்பட்டதை எதிர்ப்போம்.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த போரில் இறந்தவர்களை நினைவுக் கூரும் தூபி பலவந்தமாக அடித்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி இரவு இதனை அகற்ற முயற்சித்த போது மாணவர்களும், பிரதேச மக்களும் எதிர்ப்பை வெளியிட்டதால், ஆயுதம் தாங்கிய படையினர் வரவழைக்கப்பட்டனர்.


பல தசாப்தங்களாக மக்களை கொலை செய்யும் பேரில் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அங்கவீனமுற்றனர். சொத்துக்கள் அழிந்தன. சுருக்கமாக கூறினால், மனிதாபிமான மரணித்தது. மக்களை கொலை செய்த போரில் இறந்து போன தமது உறவினர்கள், நண்பர்கள் உட்பட நெருக்கமானவர்களை நினைவுக் கூர பல்கலைக் கழக மாணவர்கள் இந்த நினைவு தூபியை நிர்மாணித்திருந்தனர்.

பொது சமூக நோக்கில் கொல்லப்பட்ட மனிதர்கள் தெற்கில் நினைவு கூரப்படுகின்றனர். அதற்கான நினைவு தூபிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டு போரில் உயிரிழந்த படையினரை நினைவுக் கூரும் தூபிகள் தெற்கில் அதிகளவில் உள்ளன. அவர்களை நினைவுக் கூரும் நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.


இலவச கல்விக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் அரசாங்கத்தினால் கொலை செய்யப்பட்ட மாணவர்களை நினைவுக் கூரும் வகையில் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நினைவு தூபிகளை நிர்மாணித்துள்ளனர்.

வருடாந்தம் ஜூன் 20 ஆம் திகதி அந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட மாணவர்களை நினைவுக் கூரும் நோக்கில் பல்கலைக்கழகங்களில் வீரமாணவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அதேபோல் 71 போராட்டம், 88-89 ஆம் ஆண்டுகளில் நடந்த வன்செயலில் கொலை செய்யப்பட்ட மக்களை நினைவுக் கூரவும் தெற்கில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இறந்தவர்களை நினைவுக் கூரும் இந்த உரிமை வடக்கில் உள்ள மக்களுக்கு அப்படியே இருக்க வேண்டும்.


அவர்கள் நடத்திய போராட்டம் நீதியானதா, அநீதியானதா என்பது தனியாக பேசப்பட வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் தமக்காக உயிர் நீத்தனர் எனக் கருதப்படும் மனிதர்களை நினைவுக் கூர வடக்கு மக்களுக்கு உரிமை உள்ளது.

இது ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஒரு சம்பவம் அல்ல. இதற்கு முன்னர் வடக்கில் இறந்தவர்களை நினைவுக் கூரும் நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்தது. ஆயுதங்களுடனான தலையீட்டில் அவை தடுக்கப்பட்டன.


தற்போது இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட செயல் எனக் கூறி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் கைகளை துடைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றன.

எனினும் இது அரசாங்கத்தினால், திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்பது தெளிவாக தெரிகிறது எனவும் அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.