முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து பேர்லினில் ஆர்ப்பாட்டம்..!

0

யாழ் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை முன்னிட்டு சிங்கள பேரினவாத அரசை கண்டித்து யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக எதிர்வரும் திங்கள் கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரை கண்டன ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்படுள்ளது.


தாயகத்தில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தோழமையை வழங்கும் வகையில் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் உரிமையுடன் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.