வட்டவளை ஆடைத் தொழிற்சாலையின் மேலும் 16 ஊழியர்களுக்கு கொரோனா..!

0

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (27) வெளியாகின. இதில் மேலும் 16 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதன்படி வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரை 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.