15 வயதுடைய மாணவி துஸ்பிரயோகம்; பொலிஸாரினால் ஐவர் கைது..!

0

15 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நிக்கரவெட்டிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.


குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

70,33,28,25 மற்றும் 24 வயதுடைய ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் ஐவரும் சிறுமியின் உறவினர்களாவர்.


பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பாடசாலை சென்ற தமது மகள் வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்த நிலையில் சந்தேக நபர்கள் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் நிக்கரவட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.