25 மாவட்டங்களிலும் தகவல் பணியகம் திறக்கப்படும் – வெகுஜன ஊடக அமைச்சர்

0

கண்டி மாவட்ட அரசாங்க தகவல் திணைக்கள அலுவலகத்தில் தகவல் பணியகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் செயற்பட்டு வந்த வெளியீட்டு பணியகம் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப் படவில்லை. இதனால் மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் அரசாங்க வெளியீடுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.


இதனை கருத்திற்கொண்டு பணியத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நடவடிக்கை மேற்கொண்டார்.

அரசாங்க தகவல் திணைக்கள அலுவலகத்தில் தகவல் பணியகத்தை நேற்று முன்தினம் (17) அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திறந்து வைத்தார்.


இங்கு உரையாற்றிய அமைச்சர்,

சமகால அரசாங்கத்தினால் அரச தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களிலும் இவ்வாறான பணியகம் ஆரம்பிக்கப்படும். பொது மக்களுக்குத் தேவையான அனைத்து முக்கிய அரச வெளியீடுகள் உள்ளிட்டவற்;றை பெற்றுக்கொள்ளமுடியும் என்று கூறினார்.


இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலவெவ மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.