இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்; பலி எண்ணிக்கை 154ஆக உயர்வு..!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை பொகவந்தலாவ பகுதியில் சுயதனிமைப் படுத்தப்பட்டிருந்த 10 பேரில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொகவந்தலாவ மோரா கீழ் பிரிவைச் சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே இன்று (14) திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மரணமானவரின் பேரன் கொழும்பு சீதுவ பகுதியிலிருந்து சமீபத்தில் மோரா தோட்டத்திலுள்ள வீட்டிற்கு வந்துள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த இளைஞன் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்த நபருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.