உடுவில் பி்ரதேச செயலக பிரிவு அதிரடி முடக்கம்; 28 கிராமங்களில் கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம்..!

0

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.


உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் அனைத்தும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கப்படுகின்றன என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


உடுவில் பிரதேச செயலக பிரிவில் 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் யாழ் மாவட்டச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.