வவுனியாவில் தாய்க்கும் மகளுக்கும் கொரோனா; அதிரடியாக முடக்கப்பட்ட கிராமம்..!

0

வவுனியா – புதிய சாலம்பைகுளம் கிராமத்தில் தாய்க்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் கிராமம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்குள்ள ஒரு பகுதியினருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த கிராமத்திலிருந்து தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவுக்குச் சென்றுவந்த நிலையில் அவர்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய சாலம்பைக்குளம் கிராமம் இன்று சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தப்பட்ட அக்கிராமத்தினை சேர்ந்த 40க்கு மேற்பட்ட மக்களிடம் சுகாதார பிரிவினர் இன்றையதினம் (12.12) பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொண்டனர்.

இதேவேளை புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த 28வயதுடைய தாயும் அவரது 5வயதுடைய மகளுக்குமே இவ்வாறு கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து அவர்களை தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.