யாழில் வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞன் லம்போதரனை காணவில்லை..!

0

இலங்கையில் காணாமலாக்கப் பட்டோருக்கான தீர்வு இன்னும் கிட்டவில்லை. காணாமல் போன பிள்ளைகளைத் தேடி அலைந்த பெற்றோர்களின் உயிரிழப்புகள் தான் பதிவாகி பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞன் ஒருவரை கடந்த 10 நாட்களாக காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராசா லம்போதரன் என்பவர் கடந்த 26 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் இன்றுவரை திரும்பி வரவில்லை.


குறித்த நபருக்கு தொலைபேசியூடாக அழைப்பெடுக்க முயன்ற போதிலும் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவரைப்பற்றிய தொடர்புகள் கிடைக்காததால் மகனைத் தேடிக் கண்டு பிடித்து தருமாறு சாவகச்சேரி பொலிஸாரிடம் அவரது தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.


மேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்திலும் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.