காத்தான்குடி பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கொலை; ஒருவர் கைது..!

0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் அம்பாறை-அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்தில் 35 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கறைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.