பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே விலைகளைக் குறைக்கலாம்..!

0

கைத்தொழில் தொடர்பான தேசிய கொள்கை வகுக்கப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்குரிய துறைசார் அறிக்கை கிடைக்கவுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தாண்டு முற்பகுதியில் கொள்கையை வரையும் நடவடிக்கை பூர்த்தியாகும் எனவும் அமைச்சர் கூறினார்.வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கள் மீதான நிதியொதுக்கீடுகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

கைத்தொழில், விவசாயம், வர்த்தக அமைச்சுக்களை ஒருங்கிணைத்து நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டத்தை அமுலாக்கப் போவதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.


பொருட்களுக்கு உயர்ந்தபட்ச விலையை நிர்மாணிப்பதன் மூலம் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என் நம்பிக்கை தமக்கு இல்லை. உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே விலைகளைக் குறைக்கலாம் எனத் தாம் நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.