கோட்டா அரசின் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு வர்த்தமானியுடன் நின்று விடுகின்றது – அனுர

0

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதே இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் இன்னமும் எமது மக்கள் குறைந்த விலையில் அரிசியைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.


இந்த ஆண்டே இலங்கையின் நெல் உற்பத்தியில் அதிக விளைச்சல் கண்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ள போதிலும், அரிசிக்கான நிர்ணய விலையை கொடுக்க முடியவில்லை. மக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்களை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் ஆட்சி செய்கின்றது.


விஷ உணவுகள் நாட்டுக்குள் வருகின்றது, கெட்டுப்போன டின் மீன், விஷ பால்மா, மிருகங்களுக்கு கொடுக்கும் அரிசியை மக்களுக்கு கொடுக்கின்றமை, விஷ பழங்கள் என நஞ்சு உணவுகள் எமது மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது.


அதேபோல் தேசிய உற்பத்தியை பலப்படுத்துவோம் என அரசாங்கம் கூறினாலும் அதற்கான வரிக் கொள்கையொன்று நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்றும் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.