இறுதி யுத்தத்தில் பொது மக்கள் கொல்லப்பட்டமை உண்மையே; பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

0

இறுதி யுத்தத்தின் பொது 40ஆயிரம் பொது மக்கள் கொலை செய்யப்பட்டமை என குற்றம் சாட்டப் படுகின்ற போதுதிலும் அதில் உண்மையில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


ஆனால் இறுதிப் போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை உண்மையே அதில் ஒரு ஐயாயிரம் பொதுமக்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றுகையில் தற்போது வந்த புரேவி புயல் கடந்த 27ம் திகதி மாவீரர் தினத்தில் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என தமிழ் மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரின் இனவாதக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது மகர சிறையில் ஏற்பட்ட கலவரம் போல தாங்கள் சிறையிலிருந்த காலத்தில் இடம்பெற்றிருந்தால் அதைவிட சிறப்பாக இருந்திருக்கும் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.